சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறையில் பிரபல கல்வி நிறுவனமான ஸ்டார் பாலர் பாடசாலை தனது 19வது ஆண்டு நிறைவு விழாவை பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை (13) சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் மாணவர்களை கல்வியால் வளப்படுத்திய ஆசிரியர்களுக்கு கௌரவ நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், முன்னாள் அமைச்சின் செயலாளரும் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமீர் எம்.ஐ.அமீர், ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ்.எம்.சிராஜுதீன், ரிசாட் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் தலைவரும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர் கே.ஆர்.எம்.ரிசாட், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் அல்ஹாபிழ் ஹாதிக் இப்ராஹிம்,நிலா பவுண்டேசன் தலைவர் எம்.ஐ.எம்.நிசாம் என பலரும் கலந்து கொண்டனர்.