2019ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நாடு பூராகவும் உள்ள கிராமங்களில் செயற்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்றான கிராம சக்தி மகா சங்க திட்டத்தில் சம்மாந்துறை வீரமுனை வட்டார உடங்கா - 02 கிராம சேவகர் பிரிவும் தெரிவு செய்யபட்டிருந்தது.
சம்மாந்துறை பிரதேச செயலத்தின் ஊடாக அமைக்கப்பட்ட இக் கிராம சக்தி மகா சங்கமானது 224 உறுப்பினர்களைக் கொண்ட சங்கமாகும். கடந்த ஆறு வருடங்களாக தெரிவு செய்யப்படாதிருந்த இதன் புதிய நிர்வாகத் தெரிவு அண்மையில் (2025-01-07) உடங்கா - 02 பிரதேசத்தின் சமூர்த்தி உத்தியோகத்தர் காரியாலய வளாகத்தில் உடங்கா 02 பிரதேச கிராம சேவகர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் முன்னிலையில் இடம் பெற்றிருந்தது.
கிராம சக்தி மகா சங்கத்தின் அணைத்து உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலோடு இடம் பெற்ற இந் நிகழ்வில் சங்கத்தின் புதிய தலைவராக எம்.ஐ.எம். றிஸ்விகான் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். மேலும் சங்கத்தின் செயலாளராக வை.பி. பீவி என்பவரும், பொருளாளராக எம்.ஐ. சபீக் என்பவரும் தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக குழு உறுப்பினர்களாக 7 பேரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இப் புதிய நிர்வாக குழுவானது எதிர்காலத்தில் உடங்கா - 02 பிரதேச அபிவிருத்தியிலும், சமூக செயற்திட்டங்களிலும் பாரிய பங்களிப்புக்களைச் செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.