சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மூன்று வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக பாதுகாப்பு மற்றும் மனித கடத்தல் குற்றங்களுக்கான பொதுத் திணைக்கள ஒருங்கிணைப்புடன், ரியாத் பிராந்திய காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக் கைது நடவடிக்கையானது நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் விதிமீறல்களைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் - சம்மாந்துறை அன்சார்.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa