சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
"வளகு வாப்பா போடியின் ஊஞ்சல்" எனும் சிறுகதை தொகுதி புத்தகம் வெளியீட்டு விழாவை தலைமை தாங்கி நடாத்தினார் நாவலர் டாக்டர் எம்.எம்.நௌஷாத், இந்நிகழ்வினை குயிலோசை படர்க்கைகள் இணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், நிகழ்விற்கு சம்மாந்துறை பிரதேச செயலக கலாச்சார சபை அனுசரணை வழங்கியிருந்தது.
குறித்த நிகழ்வு சம்மாந்துறை கலாச்சார மண்டபத்தில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் இடம்பெற்றது.
சித்தி றபீக்கா பாயிஸ் அவர்களினால் மூன்றாவது சிறு கதை நூலாக "வளகு வாப்பா போடியின் ஊஞ்சல்" சிறு கதைத் தொகுதி காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவர் எற்கனவே இரண்டு கவிதை நூல்களை வெளியீட்டு இருக்கின்றார்.
இவர் பல்வேறு விருதுகளை பெற்று 29 ஆண்டு காலமாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றார். அத்துடன், தேசிய, சர்வதேச பத்திரிகைகள் மற்றும் பல்வேறு சஞ்சிகைகளும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தி றபீக்கா பாயிஸ் அவர்களினால் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களுக்கு நூல் வழங்கப்பட்டு புத்தகம் வெளியீடப்பட்டது.
நூலின் முதன்மை பிரதிகளை சம்மாந்துறை ஈஸ்டன் ஜூவலரி உரிமையாளர் கலாநிதி எட்.ஏ. பஸீர் (J P), மக்கள் வங்கியின் பிரதி முகாமையாளர் சி. நிஷார், நிஸார் ஹார்ட் வெயார் உரிமையாளர் எஸ்.டி. அப்துல் சலாம், ஜெஸ்லான் சாரதி பயிற்சி பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம். ஜாஹிர் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு, தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை கலை கலாசாரபீட சிரேஷ்ட பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், பல்கலைக்கழக ஓய்வு நிலை பதிவாளர் மன்சூர் ஏ காதர், ஆசிரிய வளவாளர் முதுகலைத்துவமானி ஜெஸ்மி எம் மூஸா என பலர் கலந்து கொண்டனர்.