இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் இன்று(04.02.2025) பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
தேசியக்கொடி ஏற்றல் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டதோடு எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளன பிராத்தனையும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து பிரதேச செயலாளரினால் சுதந்திர தின உரை இடம்பெற்றது.
இந்நிகழ்வோடு இனைந்ததாக
01. மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டமை.
02. சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை.
03. சம்மாந்துறை சுற்றாடல் கழக மாணவர்களினால் மர நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகளில் கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா, நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.