ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது இலங்கை விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தியதாக வெளியான செய்திகளை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது மூன்று விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகள் பரவி வருவதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது எந்தவொரு விமானமும் பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்த பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ வாகனத்தை மாத்திரமே பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.