அனர்த்தம் நடைபெறும் சந்தர்ப்பங்கள் மற்றும் அவசரகால நிலைமைகளின் போது மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான கற்கை நெறி சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (14) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இப்பயிற்சி நெறியில் பங்குபற்றும் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கி வைக்கப்பட்டதுன், மேற்படி பயிற்சி நெறி தொடர்பான தெளிவுட்டல் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் அவர்களினால் வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், கல்முனை சுகாதார அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் டாக்டர் அஜ்வத், காரைதீவு, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர்கள், இராணுவம் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா என பலரும் கலந்து கொண்டனர்.