( ஷாதிர் ஏ ஜப்பார் || ஏ.பி.எம் இம்ரான் || ஏ.ஆர் ஆம்ஜத் )
'"2030 இல் யாவருக்கும் உறையுள்" திட்டத்தின் கீழ் 13 வது வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (14) 307/2A அக்ஸா வீதி மலையடிகிராமம்- 04 சம்மாந்துறையில் நிர்மாணிக்கப்பட்டது.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்திவரும் சமூகசேவையாளரும் விஞ்ஞான முதுமானியுமான OCD அமைப்பின் தலைவர் Y.B அஸ்மி யாசின் அவர்களால் இன்று பயனாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை உலமா சபை தலைவர் ஐ.எல்.எம் பசீர் மதனி, உலமாக்கள்,அரசியல்வாதிகள்,புத்திஜீவிகள், கல்விமான்கள், OCD அமைப்பின் உறுப்பினர்கள் ,ஆலோசகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைக் காலமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் கட்டிட நிர்மான பொருட்களுக்கான விலை மிகப் பெரிய அளவில் உயர்ந்து செல்வது ஒரு புறம் பொருட்களுக்கான தட்டுப்பாடு இன்னொரு புறம் இவ்வாறான சவால்கள் எதிர் கொண்டாலும் இச் சவால்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து தான் செயற்படுத்தி வரும் உறையுள் திட்டத்தினை இடை விடாது இதுவரைக்கும் 12 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட நிலையில் 13 வது வீடு கையடிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.