சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை காலை வேளையில் நடைபெற்றுள்ளது.
சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியின் சுற்றாடல் கழக பெண் மாணவிகள் கலந்து கொண்டு மரம் நடுகை மற்றும் சிரமதான நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சமூக வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஐ.எம். ஹில்மி,மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.