சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் தலைமையில் இன்று (05) புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் 2024 ம் ஆண்டிற்கான (இறுதி) சம்பிரதாய பூர்வமான அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வும் பொலிஸ் நிலைய உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். அத்துடன், பொலிஸ் சேவைப் பிரிவு, பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளும் மற்றும் வாகனங்களும் பரிசோதனை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத், பொலிஸ் உப பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் என கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.