பாறுக் ஷிஹான்.
77வது சுதந்திர தின விழா நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (4) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது 77வது சுதந்திர தின தேசியக்கொடியை சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் பதில் குவாஷி நீதிபதி அஹமட் லெவ்வை ஆதம்பாவா ஏற்றி வைத்தார். தேசிய கீதமும் இசைக்கப்பட்டடன.
இந்நாட்டின் சுபீட்சம், சமாதானத்திற்காக இந்நாட்டு மக்கள் ஐக்கியப்பட்டு வாழ வேண்டுமென்பதற்காகவும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படையினர் மற்றும் ஏனையவர்காளுக்காக 2 நிமிட மெளனப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து துஆப்பிரார்த்தனை இடம்பெற்றதுடன், நிகழ்வில் சம்மாந்துறை குவாசி நீதிமன்ற நிர்வாக உத்தியோகத்தரும் மேல் நீதிமன்ற உத்தியோகத்தருமான எம்.எப்.எம்.சமீன், குவாசி நீதிமன்ற உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர் எம்.சி.பௌமிலா மற்றும் உதவியாளர்களிம் கலந்து சிறப்பித்தனர்.