இந்தியா.
இயற்கைக்கு மாறான உடலுறவால் ஏற்பட்ட மலக்குடல் காயங்களால் பாதிக்கப்பட்டு மனைவி உயிரிழந்த வழக்கில் கைதான கணவரை விடுவித்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு ஆணுக்கும் அவரது வயது வந்த மனைவிக்கும் இடையிலான இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனைக்குரிய குற்றம் இல்லை என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, மனைவியின் அனுமதியின்றி, கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மனைவி உயிரிழந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்தது.
பாதிக்கப்பட்டவரின் 'ஆசனவாயில்' கணவர் தனது கையைச் செருகியதாகவும், அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் வலி இருப்பதாக புகார் அளித்ததாகவும், பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அந்த மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த பெண்ணுக்கு பெரிட்டோனிடிஸ் மற்றும் மலக்குடலில் துளை இருந்ததாக மருத்துவர் கூறினார்.