Ads Area

குவைத்தில் மக்கள் தொகை கணக்கு வெளியீடு முதலிடத்தில் தொடர்ந்து இந்தியர்கள் நீடிக்கின்றனர்.

குவைத்தின் மொத்த மக்கள் தொகை 49,87,826 பேர் என்ற சமீபத்திய புள்ளி விபரங்கள் அடங்கிய புதிய கணக்குகளை சிவில் தகவல்களுக்கான பொது ஆணைய‌ம் வெளியிட்டுள்ளது. குடிமக்களை தவிர்த்து, இந்த பட்டியலில் இந்தியர்கள் நாட்டில் வசிக்கின்ற மிகப்பெரிய புலம்பெயர் சமூகமாக உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் குவைத் குடிமக்கள் 31 சதவீதமும், இந்தியர்கள் 20 சதவீதமும், எகிப்தியர்கள் 13 சதவீதமும் வசித்து வருகின்றனர்.


மேலும் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில்  நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் மொத்தமாக 22,470,29 பேர் பணிபுரிகின்றனர். இதில் 77.52% குவைத் நாட்டவர்கள் அரசுத்துறையில் பணிபுரிகின்றனர். அரசுத் துறையில் பணிபுரிகின்ற குவைத் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினர் பட்டியலில் அதிக சதவீதம் எகிப்தியர்களே, இவர்கள் மொத்த அரசு ஊழியர்களில் 7.25% அளவுக்கும், அரசு ஊழியர்களில் 4.42% மட்டுமே இந்தியர்களும் வேலை செய்கின்றனர். அதேசமயம் தனியார் துறை ஊழியர்களில் 31.1% இந்தியர்கள் மற்றும் 25.4% எகிப்தியர்கள். இத்துறையில் உள்ள மொத்த பணியாளர்களில் குவைத் குடிமக்கள் வெறும் 4.1% மட்டுமே என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.


இது தவிர, சமீபத்திய புதிய புள்ளிவிபரகணக்குகளின் படி மொத்த குவைத் குடிமக்களில் 15 வயதுக்குட்பட்ட குவைத் நாட்டவர்கள் 32% பேரும், அதே சமயம் 15 முதல் 64 வயதுடையவர்கள் 64% பேரும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குவைத் மக்கள் 5% பேரும் வசித்து வருகின்றனர். நாட்டில் உள்ள மொத்த குவைத் குடிமக்களில் 51% பேர் பெண்கள் மற்றும் 49%  பேர் ஆண்கள் என்றும் புள்ளிவிவர கணக்குகள் குறிப்பிடுகின்றன.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe