Ads Area

சம்மாந்துறையில் உள்ள பலசரக்குக்கடைகள், சிறிய சூப்பர் மார்க்கட்டுகளுக்கு தண்டப்பணம் அறவீடு.

 பாறுக் ஷிஹான்.


சரக்குக்கடைகள் மற்றும் சிறிய சூப்பர் மார்க்கட்களில்  காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்கர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு ரூபா 20,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாத் ஆலோசனைக்கமைய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் புதன்கிழமை (19) சம்மாந்துறை புறநகர்ப்பகுதியில் பல சரக்குக்கடைகள் மற்றும் சிறிய சூப்பர் மார்க்கட்களில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கெதிராக தொடரப்பட்ட 3 வழக்குகளில் ரூபா 20,000 (10000, 5000, 5000) தண்டப்பணம் அறவீடு செய்யப்பட்டது.


சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த  வர்த்தகர்களுக்கு மொத்தமாக ரூபா 20,000 தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


இதன் போது, Color Code இடப்படாத உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்டது.


எதிர்வரும் நோன்பு காலத்தை முன்னிட்டு மக்களுக்கு சிறந்த உணவுப்பொருட்களை வழங்கும் பொருட்டு தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe