Ads Area

சம்மாந்துறையில் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் வெளிப்படைத்தன்மையோடு தயாரிக்க வழி செய்ய வேண்டும்.

அண்மைக் காலமாக சகல ஊர்களிலும் சுகாதார அதிகாரிகளால் பல உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மனிதப் பாவனைக்கு உதவாத உணவுகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உணவக உரிமையாளர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமையினை செய்திகள் ஊடாக யாவரும் அறிந்திருப்பீர்கள்.


சுகாதார அதிகாரிகளின் சோதனையின் போது நமது ஊரில் உள்ள சில உணவங்களில் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களைப் பார்த்தால் “இவ்வளவு நாளும் இதையா நாம் வாங்கித் திண்றோம்“ என காறித் துப்பும் அளவுக்கு மிகவும் அசுத்தமாக, சுகாதர சீர்கெட்டு, தரங்கெட்டு இருந்தது. பணம் கொடுத்து நம்பிக்கையோடு வாங்கி உண்ணும் மக்களின் வயிற்றிலடிக்கும் இத்தகைய உணவங்களை முற்றாக இழுத்து மூட வழி செய்ய வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற உணவக உரிமையாளர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.


நமது ஊரில் உள்ள சில உணவங்களைத் தவிர பெரும்பாலான உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள் வெளிப்படைத் தன்மையில்லாது மறைமுகமாக உணவகத்தின் மூடிய அறைக்குள் அல்லது உணவகத்தின் பின் பக்கமே தயாரிக்கப்படுகிறது. தற்போது சுகாதார அதிகாரிகளினால் சோதனைக்கு உட்பட்டு கைப்பற்றப்பட்ட உணவுப் பண்டங்கள் அனைத்தும் இவ்வாறான இடங்களில் வைத்தே கைப்பற்றப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது. 


சில உணவகங்களைப் பார்த்தால் பார்ப்பதற்கு அழகாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வண்ணமிருக்கும் ஆனால் அவர்கள் உணவுப் பண்டங்களை தயாரிக்கும் இடங்களைப் பார்த்தால் காறித் துப்பும் படியிருக்கும். 


Chicken wings, chicken nuggets, burger, broasted போன்றவற்றினை விற்பனை செய்யும் சம்மாந்துறை பொலிஸ் வீதியில் உள்ள  ஒரு பாஸ்பூட் உணவகத்தில் நான் Fry Chicken wings வாங்கச் சென்றிருந்தேன் அங்கு ஓடர் கொடுத்து விட்டு நமது ஓடர் வரும் வரை காத்திருக்க வேண்டும் சிறிது நேரத்தில் நமது ஓடர்கள் கைகளில் கிடைக்கும் ஆனால் அவர்கள் எங்கிருந்து, எவ்வாறு அதனை தயாரிக்கின்றார்கள், எவ்வாறான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுகின்றார்கள் என்பதை அறவே காண முடியவில்லை. நமது சம்மாந்துறையில் உள்ள பல உணவங்களில் மூடிய அறைக்குள்ளேயே உணவுகள் தயாரிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நான் வாங்கிய Chicken wings சில் எண்ணைக் கொதம்.


இவ்வாறு வெளிப்படைத்தன்மையற்று மூடிய அறைக்குள் உணவுப் பண்டங்களை தயாரிப்பதில் பேக்கரிகள் முன்னிலை வகிக்கின்றன. பேக்கரிகளில் எவ்வாறு உணவுகள் பண்டங்களை தயாரிக்கின்றார்கள் என்று யாரும் உள்ளே சென்று பார்க்க முடியாது பார்த்தால் பேக்கரிகளில் எதுவுமே வாங்கித் திண்ணவே முடியாது.  


அதே போல் சில உணவகங்களில் முன் முகப்பிலேயே மரக்கறி ரொட்டி, இறைச்சி ரொட்டி, கொத்து ரொட்டி எல்லாம் மக்கள் பார்க்கும் வண்ணமே செய்து தருவார்கள் இது நல்லதுதான் ஆனால் அந்த ரொட்டி போடும் நபர் மிகவும் அழுக்கான சாரன், சேட்டு உடுத்திருப்பார் ஒழுங்கான சுகாதார முறைப்படி ஆடையணிந்திருக்க மாட்டார். அவர் உடுத்திருக்கிற சாரனைப் பார்த்தாலே பத்து நாள் கழுவாத சாரனைப் போல் இருக்கும், தலையில் தொப்பி கூட அணிந்திருக்க மாட்டார். சில கோக்கிகள் வேர்த்து ஊத்துவார்கள் அப்படியே பீடி குடிச்சி குடிச்சி ரொட்டி அடிப்பார்கள். இவைகள் அத்தனையும் மாற்றப்பட வேண்டும்.


Sammanthurai Pradeshiya Sabha, Moh Sammanthurai, மற்றும் பொறுப்புவாய்ந்த சம்மாந்துறை சுகாதார அதிகாரி Nowshad Musthafa போன்றவர்கள்  சம்மாந்துறையில் உள்ள உணவங்கள் அனைத்துக்கும் உணவுகளை தயாரிப்பதில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்கும் படி அறிவுறுத்த வேண்டும். மக்கள் பார்க்கும் வண்ணம் உணவுகளை தயாரிக்க பொறிமுறையமைத்து அதனை பின்பற்ற உணவக உரிமையாளர்களை அறிவுறுத்த வேண்டும் மீறும் உணவகங்களின் உரிமையினை ரத்துச் செய்ய வேண்டும். வெளிப்படைத் தன்மையோடு உணவுகள் தயாரிக்கப்படும் போதுதான் வாடிக்கையாளர்களுக்கும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவின் சுத்தம்-சுகாதாரத் தன்மை தெரிய வரும். அதே போல் உணவுகளைத் தயாரிக்கும் கோக்கிகளின் உணவுப் பாதுகாப்பு ஆடை விடையத்திலும் ஒரு பொறிமுனையினை ஏற்படுத்தி அதனை செயற்படுத்த வேண்டும்.


அன்சார்.

சம்மாந்துறை.

2025-02-26.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe