Ads Area

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவு.

 பாறுக் ஷிஹான்.


சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா மீண்டும் எவ்வித போட்டிகளுமின்றி ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் நடப்பாண்டிற்கான பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவானார்.


மேலும், சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.வை.அன்வர் ஸியாத், பொருளாளராக சட்டத்தரணி எம்.எம்.எஃப். ஷாமிலா, உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நஸீலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா கிழக்கின் பல்வேறு நீதிமன்றங்களுக்குச் சென்று வாதாடும் திறமை கொண்டவர் என்பதுடன், கடந்த காலங்களிலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் பிராந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு சட்டத்தரணிகளின் நலன்சார் விடயங்களிலும் சம்மாந்துறை நீதிமன்றம் உருவாகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe