கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தில் 30.01.2025 வியாழக்கிழமை வித்தியாரம்ப விழா நிகழ்வும், புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 150 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த முகம்மட் றிஸ்விகான் பாத்திமா ஹனா என்ற மாணவிக்கான கெளரவிப்பு நிகழ்வும், தரம் 11 மாணவர்களின் உள்நுழைவு நிகழ்வும், மூன்றாம் தவணைப் பரீட்சையில் 1,2,3 ஆம் நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் A. முகம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் கல்வித் திட்டமிடலுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் Mrs. A.C.N. நிலோபரா அவர்களும் கெளரவ அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் Mr.M.M. நிசாறுடீன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக EPSI இணைப்பாளரும் சிங்களப் பாட ஆசிரிய ஆலோசகருமான A.H.நாசிக் அஹமட் மற்றும் பிரதி அதிபர்களான Mr. U.L. லாபிர் அவர்களும், Mrs.M.H. ஜெஸீலா அவர்களும், SDEC உறுப்பினர்களும், GS, EDO, ஜமாலியா பள்ளிவாசல் தலைவர், முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்களும், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் புதிதாக தரம் 1 இல் இணைந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில் பொருட்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்ற மாணவியின் பெற்றோரான Mr.M.I M. றிஸ்விகான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டதுடன் சித்தியடைந்த மாணவிக்கும், கற்பித்த அசிரியர்களுக்கும் கெளரவம் மாணவியின் பெற்றோராலும் ஆசிரியர் சபையினாலும் வழங்கி வைக்கப்பட்டது.