சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் உட்பட்ட நூர் பள்ளிவாசல் அருகாமையில் இருந்த (EP VO 2377) எனும் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் (13) மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முறைப்பாடுக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குறித்த சந்தேக நபருக்கு நிலுவையில் ஐஸ் போதைப் பொருள், ஆடு, மாட்டு, தொலைபேசி, தங்க நகை போன்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு வழக்காகத்தான் இன்றைய தினம் மட்டக்களப்பு சிறைச்சாலை இருந்து கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றிற்காக இன்று (13) வியாழக்கிழமை சந்தேக நபர் அழைத்து வரப்பட்டு சந்தேக நபரின் வழக்கு விசாரணையின் பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இதன் போது, சந்தேக நபரை பிணை எடுப்பதற்கு பிணையாளிகள் இன்மையினால் நீதிமன்ற உள்ளக வளாகத்தில் உள்ள சிறைக்கூடத்திற்கு சந்தேக நபரை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்துச் சென்ற வேளை சந்தேக நபர் நீதிமன்ற சுவரின் மேல் ஏறி தப்பியோடியதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த சந்தேக நபர் சில நாட்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதுடன், தப்பிச் சென்ற சந்தேக நபர் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்கவர் என்பது விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேக நபர், தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கும்படி பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையம்
0672 260 222
0771319631