சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவியின் தலைமையில் அம்பாறை குளத்தில் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காற்றல் தொடர்பான பயிற்சி நெறியினை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.எம். நஸீர் ஆரம்பித்து வைத்தார். அத்துடன், அம்பாறை பொலிஸ் நிலைய மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காற்றல் அதிகாரிகளான ஏ.டி. அசங்க, ஆர்.ஏ.எஸ்.என். குமார, எம்.ஆர்.சி.எஸ். பண்டார, கே.ஜி.எஸ். சரந்தினன், டபிள்யூ.டி.எஸ். வசந்த, உள்ளிட்ட குழுவினரினால் சுமார் 30 தொடக்கம் 40 வரையான தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நான்காம் நாள் பயிற்சியில், படகு ஓட்டுதல், தாழ்வான இடத்தில் தாழ்ந்தவரை எப்படி மீட்பது, படகை நிறுத்துவதற்கு நங்குரத்தை எப்படி பயன்படுத்துவது மற்றும் பழுதடைந்த படகை திருத்துதல் தொடர்பான பயிற்சி அம்பாறை குளத்தில் வழங்கப்பட்டது.
இதன் போது, அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா மௌலவி அவர்களினால் தொடர்ச்சியாக நான்காவது நாளாக காலை, மாலை சிற்றுண்டி மற்றும் பகல் உணவு போன்றவை வந்தவர்களுக்கு இப்பயிற்சியில் ஈடுபடும் அனைவரும் தமது கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.