Ads Area

சம்மாந்துறையில் இடம் பெற்ற முன்பள்ளி சுகாதார அபிவிருத்தி தொடர்பில் அறிவூட்டல் நிகழ்வு.

 நூருல் ஹுதா உமர்.


சம்மாந்துறை அல் வசாத் பாலர் பாடசாலையில் முன் பள்ளி சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்வு இன்று நடைபெற்றது.


இந்நிகழ்வில் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் ஹில்மி மொஹமட், எவ்வாறு ஒரு முன்பள்ளியை சுகாதார அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவது என விளக்கினார்.


இந்நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌசாத், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பைலான் நளீம், பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எம்.தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதார விடயங்களைத் தெளிவுபடுத்தினர்.


அல் வசாத் பாலர் பாடசாலை நிர்வாகிகளையும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கியதாக நடைபெற்ற இச்சுகாதார அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் நிகழ்வானது, இம்முன்பள்ளியை, 2025 இற்கான சிறந்த சுகாதார மேம்பாட்டு அமைப்பு முன்பள்ளியாக மாற்றுவதற்கான முன்னோடி நிகழ்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe