புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு ஒன்று நேற்று சம்மாந்துறை இர்பான் யூசுப் லெப்பை ஆசிரியர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர் இர்பான் யூசுப் லெப்பை அவர்களின் பிரத்தியேக கல்வி நிலையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தன்னிடம் கல்வி கற்று சிறந்த முறையில் 2024 ம் ஆண்டின் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த 7 மாணவ-மாணவியர்களுக்கு பூமாலை அணிவித்து கௌரவித்து, நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த பிரத்தியேக வகுப்பு ஆசானாக பல வருடங்களாக திகழ்ந்து கொண்டிருப்பவரான இர்பான் ஆசிரியர் கற்பித்தலில் மட்டும் இன்றி மாணவர்களின் வெற்றிக்கான பல செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் ஓர் சிறந்த ஆசிரியராக செயற்படுகிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.