Ads Area

சம்மாந்துறையில் முன் பள்ளி பிள்ளைகளின் சுகாதார மேம்பாடு தொடர்பான பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

முன் பள்ளி பிள்ளைகளின் சுகாதார மேம்பாடு தொடர்பான பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியத்தில் இன்று (05) புதன்கிழமை நடைபெற்றது.


சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ். எல். எம். ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம்(LLB) அவர்களின் ஒருங்கிணைப்பில் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர் (முன்பள்ளி) எப். றிஸ்வி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் சுகாதார கல்வி உத்தியோகத்தர் எம்.ஜே.எம்.பைறோஸ், சம்மாந்துறை பிரதேச செயலக உளவளவ ஆலோசகர் எம். பர்ஸானா, முன்பள்ளி சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 84 முன் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்விற்கு வளவாளராக சமூக வைத்திய நிபுணர் டாக்டர் எம்.ஐ.எம். ஹில்மியினால் முன் பள்ளி பிள்ளைகளின் சுகாதார மேம்பாடு பற்றி விரிவாக விளக்கப்பட்டது. அத்துடன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் றிஸ்பின் வழங்கி வைத்தார்.


மேற்படி நிகழ்விற்கு, லயன்ஸ் கழகம் பிரதிநிதிகளாக எம்.டி.எம். அனfப் பொறியாளர், சாஹிர் அஹமட், எம்.டி.எம். பசீர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், நிகழ்விற்கு லயன்ஸ் கழகம் அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe