Ads Area

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டீ.ஏ.சீ.என். தலங்கம இன்று (6) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்  கொண்டார்.


குறித்த நிகழ்வானது திருகோணமலை வரோதயர் நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் மிக எளிமைமையான முறையில் இடம்பெற்றது.


கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டீ. ஏ.சீ.என். தலங்கம இதற்கு முன்னதாக மீன்பிடி அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.


ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் கடந்த ஜனவரி மாதம் (31) ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இவருக்கான நியமனக்கடிதம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


District Media Unit 

Trincomalee 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe