சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட பலருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு (15) கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் தலைமைக் காரியாலயத்தில் ரஹ்மத் மன்சூரின் தலைமையில் நடைபெற்றது.
றிசாட் அன்ட் பிரதர்ஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் அல் மனார் சமூக சேவை நலன்புரி ஒன்றியத்தின் தலைவர் கே.ஆர்.எம். றிசாட் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக செயற்பாட்டாளர், சட்ட இளமானி எம்.எல். சுபைதீன் ஆகிய இருவரின் வேண்டுகோளின் பேரில் ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு, Y.W.M.A. பேரவையின் தலைவி பவாஸா தாஹா, சீனியா தாஸிம், கல்முனை பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்ஸின் பக்கீர், கல்முனை ஆதார வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர் சிறீஸன், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கண் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் உவைஸ், என பலர் கலந்து கொண்டனர்.