Ads Area

பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபான சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன ; பிரதேச செயலாளரின் அதிரடி நடவடிக்கை!!

 ( வி.ரி. சகாதேவராஜா)


கல்முனை பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று (16) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் தற்காலிகமாக மூடப்பட்டன.


பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு அமைதியில்லா நிலைமையும் காணப்பட்டது. 


இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு மதுபானசாலைகளும் தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.


ஏலவே, இவ்வாறு ஒரு தடவை புதிய மதுபான சாலை  பிரதேச செயலாளரால் தற்காலிகமாக மூடப்பட்டமை தெரிந்ததே.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe