சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலில் இன்று (25) செவ்வாய்க்கிழமை தீடீர் உணவுப் பரிசோதனை மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் கல்முனை நகர் பகுதியில் தீடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்ற போது, இதில் 5 உணவகங்களுக்கு எதிராக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் அவர்களினால் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டது.
இதேவேளை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மதன் தலைமையிலான குழுவினரினால் சம்மாந்துறை பிரதேசத்தில் தீடீர் சோதனை நடவடிக்கை இடம்பெற்ற போது, இதில் 5 உணவகங்களுக்கு எதிராக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மதன் அவர்களினால் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு உணவின் தரம் பற்றி தகவல் வழங்கப்பட்டது.
குறித்த உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சம்மாந்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 5 உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக ரூபா 70,000/= தண்டப்பணம் அறவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.