Ads Area

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை; 20 ஆயிரம் தண்டப் பணம்!

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலை சுகாதார முறையில் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.


குறித்த முறைப்பாடுக்கு அமைய நேற்று (10) சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையிலான குழுவினரினால் திடீர் சோதனை நடவடிக்கை இடம் பெற்றது.


இதன் போது, சுகாதார வைத்திய அதிகாரிகளினால் குறித்த சிற்றுண்டி சாலை உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் சம்மாந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது ரூபா 20 ஆயிரம் தண்டப்பணம் அறவிட்டது மட்டுமன்றி எச்சரிக்கையையும் செய்யப்பட்டது.


இச்சோதனை நடவடிக்கையில் பொதுச் சுகாதார பரிசோதகளான எம்.டி. நசார், டி. தினேஸ், ஏ.எம். றம்சீன் உள்ளிட்ட அதிகாரிகள் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe