சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
நேற்றைய தினம் அரசாங்கம் அறிவித்ததைப் போன்று இன்றைய தினம் (06) வியாழக்கிழமை சம்மாந்துறை நெற் சந்தை சபையின் சம்மாந்துறை கிளை திறக்கப்பட்டிருந்தது. அத்துடன், அதிகாரி ஒருவரும் அங்குள்ள காரியாலயத்தில் இருந்தார்.
மேலும், நெல் சந்தை சபையின் சம்மாந்துறை கிளையின் நெற் களஞ்சியசாலை நெல் கொள்வனவை மேற்கொண்டு சேமித்து வைக்கும் வகையில் தயார் நிலையில் இருப்பதையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது.
இதே வேளை, நிந்தவூரில் உள்ள நெற் சந்தை சபையின் கிளை மூடப்பட்டிருந்தது. நிந்தவூரில் உள்ள நெற் களஞ்சியசாலை மூடப்பட்டிருந்தது. அத்தோடு, களஞ்சியசாலை அமைந்துள்ள பிரதேசம் காடாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.