எம்.என்.எம்.அப்ராஸ்.
ரஹ்மத் பவுண்டேசனால் இலவசமாக மூக்குக்கண்ணாடிகள் விநியோகம் கல்முனையில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது.
கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில், வை.எம்.எம்.ஏ.பேரவை மற்றும் கல்முனை ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பங்களிப்புடன் இலவச மூக்குக்கண்ணாடிகள் மற்றும் கண் வில்லைகள் வழங்கும் நிகழ்வு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் இஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரின் தலைமையில் கல்முனை காசிம் வீதியில் அமைந்துள்ள ரஹ்மத் பவுண்டேசன் அலுவலகத்தில் சுமார் 500 க்கு மேற்ப்பட்டவர்களுக்கு இலங்கையைச் ல்சேர்ந்தவர் கனடாவில் வாழும் சீனியா தாசிம் அவர்களின் அனுசரணையில் கண் பரிசோதனை செய்யப்பட்டு மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது, கல்முனை பிரதேச செயலாளர் டி.எம். எம்.அன்ஸார், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன், வை.எம்.எம்.ஏ தலைவி பவசா தாஹா, கல்முனை ஆதார வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர் சிறீஸன், கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கண் பிரிவுக்குப் பொறுப்பான வைத்தியர் உவைஸ், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமைத்துவப்பணிப்பாளர் வைத்தியர் சனா, ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமையாளர் றிஷாட் வஹாப், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதிமார்கள், வைத்தியர்கள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.