சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வசதி குறைந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும்,தூர இடங்களில் சென்று கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் மாணவர்களின் நலன் கருதியும் இஸ்லாமிக் ரிலீப்- கனடா (Islamic Relief- Canada) நிறுவனத்தின் சுமார் இரண்டு மில்லியன் நிதிப் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட 53 மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் நிதி இணைப்பாளர் பெளஸான் ரிஸ்னி,சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.எம் அரபாத், உதவிக் கல்விப் பணிப்பாளர் பரமதயாளன்,இஸ்லாமீக் ரிலீப் நிறுவனத்தின் சிரேஸ்ட திட்ட உத்தியோகத்தர் எஸ்.எல்.ஏ சியாஸ்,திட்ட உத்தியோகத்தர்களான எம்.எச் ஆசாத்,எப் சஸ்னா உட்பட கிராம சேவகர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
வாழ்வாதரத்தின் ஊடாக கல்வியை மேமபடுத்துவோம் எனும் செயற்திட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 125 குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்ட்டுக்காக பல்வேறுபட்ட உதவிகள் வழங்கியுள்ள நிலையில் அவ் குடும்பங்களில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்த உதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.