ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை தொகுதி தேர்தல் முகவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஒலுவில் தனியார் விடுதியில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இன் நியமனமானது சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை ,நாவிதன்வெளி பிரதேச சபை போன்ற சபைகள் உள்ளடக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் உதுமாவெவ்வை , கட்சியின் பொருலாளரும் கல்முனை மாநகர சபை முன்னால் பிரதி முதல்வருமான றகுமத் மன்சூர் மற்றும் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.