Ads Area

வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்யும் காவாலிகள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நம்பிக்கையாளர் சபையோடு கலந்துரையாடல்.

 சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.

 

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினருக்கும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை நம்பிக்கையாளர் காரியத்தில் நடைபெற்றது.


இச்சந்திப்பின் போது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தினால் மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள், போதைப் பொருள் வியாபாரம், தலைகவசம் இன்றி வேகமாக மோட்டார் சைக்கிளில் இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் பயணம், பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களை தொந்தரவு செய்தல், வீதியோரங்களில் பயணம் செய்பவர்களுக்கு இடைஞ்சலாக கழிவுப் பொருட்கள் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.


இந்நிகழ்வில், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe