கல்முனை மறைக்கோட்ட மேற்ப்புப்பணி பேரவையின் ஒழுங்கமைப்பில் ஹிங்குரானை கல்வாரித் திருத்தலத்தில் சிலுவைப்பாதை நிகழ்வு (15) அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் பல பங்குகளில் இருந்து இறை மக்கள் கலந்து கொண்டனர்.
சிலுவைப்பாதை அருட்தந்தை றொசான் திசேரா அவர்களின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்திரு காலாநிதி அன்டன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் தலைமையில் திருப்பலி நிகழ்வும் நடைபெற்றதுடன், இதில் அருட்தந்தையர்களும், அருட்சகோதரிகளும், இறை மக்களும் கலந்து கொண்டனர்.
பாடுகளின் பாதையில் பரமனுடன் பயணிப்போம்.எம் பாவங்களுக்காய் மண்டியிட்டு மண்றாடுவோம். எப்போது நீ உன் பாவத்தை உணர்ந்து மனம் வருந்துகின்றாயோ அப்போதே உன் பாவங்களை மன்னிப்பார் இரக்கத்தின் தேவன்.
செய்தியாளர்
க. டினேஸ்.