சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியில் தீவிர போராளியாக இருந்து வந்த சம்மாந்துறை முஹம்மட் ரிஸ்விகான் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியில் இணைந்து இம்முறை உள்ளுராச்சிமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்ரஸில் கட்சியில் இணைந்து கொண்ட முஹம்மட் ரிஸ்விகான் நடைபெறவுள்ள உள்ளுராச்சிமன்றத் தேர்தலில் சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தில் 3 வேட்பாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளார்.
இந் நிகழ்வானது சம்மாந்துறை அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் காரியாலயத்தில் மக்கள் காங்ரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர் அவர்களில் தலைமையில் இடம் பெற்றது.
அதிகார வர்க்கத்தினரின் ஊழல் போன்றவற்றுக் எதிராக நீண்டகாலமாக போராட்டங்களில் ஈடுபட்டு நீதிமன்றங்கள் வரை சென்று அவற்றில் வெற்றியும் பெற்ற வேட்பாளர் முஹம்மட் றிஸ்விகான் இம்முறை வீரமுனை வட்டாரத்தில் வெற்றியீட்டுவார் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.