சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் கசிப்புடன் பெண் ஒருவரை (27) நண்பகல் வேளையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சுட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 12,000 மில்லி லீற்றர் கசிப்பையும், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
வீரமுனை 01, பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 12,000 மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான சார்ஜன் ஏ.ஜி. அநுர, சார்ஜன் வி.டபிள்யூ. அசோக்க உள்ளிட்ட அதிகாரிகளினால் இக் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.