சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
கிழக்கு மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(27) சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சில பொதுச் சுகாதார காரியாலயங்களில் கடமையாற்றுகின்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகவீன தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டனர்.
சம்மாந்துறை பொதுச் சுகாதார காரியாலயத்தில் கடமையாற்றுகின்ற பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று சுகவீனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் நாளையும் இப்போராட்டத்தை தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையின் போது பொது சுகாதார பரிசோதகர்கள் கருத்தில் கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு கிழக்கு மாகாண அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கப்பெறவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சீ.எஸ்.முத்துகட ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.