சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் தொடர்பான பயிற்சி நெறியின் ஐந்தாம் நாள் நேற்று (08) சனிக்கிழமை சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம். முஸ்தபா தலைமையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கூட்ட மண்டபத்தில் இன்று (08) சனிக்கிழமை நடைபெற்றது.
மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காற்றல் தொடர்பான பயிற்சி நெறியினை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் ஆரம்பித்து வைத்தார்.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், வெள்ள பெருக்கு ஏற்படும் இடங்கள், அம்பாறை சேனநாயக்கா சமுத்திரத்தின் முக்கியத்துவம், வெள்ள நிலைமைகளின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கம் அளித்தார்.