Ads Area

தினமும் காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியினூடாக பயணிக்கும் யானைகள் ; மக்கள் அச்சத்துடன் பயணம்!

  (  வி.ரி. சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் தினமும் காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியினூடாக நூற்றுக்கணக்கான  யானைகள் கடந்து செல்கின்றன.


இதனால் பொதுமக்கள் போக்குவரத்து சிலமணி நேரம் ஸ்தம்பிதமடைகின்றது. மக்கள் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர்.


இன்றும் நூற்றுக்கணக்கான யானைகள் பிரதான வீதியை குறுக்கறுத்துச் சென்றன.


அச் சமயம் வன விலங்குகள் பொறுப்பு உத்தியோகத்தர்கள் அங்கு கடமையில் நின்றனர்.


அம்பாறை கரையோரப் பகுதிகளில் அறுவடை நடைபெறும் சமகாலத்தில் யானைகளின் வருகை பலத்த சேதத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.


அண்மையில் காரைதீவு நிந்தவூர் எல்லையில் உள்ள  அறுவடைக்கு தயாராக இருந்த இருவேறு விளைந்த வயல்கள் யானைகளின் அட்டகாசத்தால் துவம்சம் செய்யப்பட்டுள்ளன.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe