Ads Area

சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலை சாதனை மாணவிக்கு கௌரவிப்பு.

 ( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தின் சாதனை மாணவி சிவரூபன் ஜினோதிகாவிற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.


இலங்கை தேசிய கனிஷ்ட இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு  (3ம் இடம்) வெண்கல பதக்கத்தினை பெற்ற சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலை மாணவி சிவரூபன் ஜினோதிகாவே இவ்விதம் பாராட்டு பெற்றவராவார்.


இந் நிகழ்வு  (14) வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது. நிகழ்வில், சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர், எஸ். மகேந்திரகுமாருடன்,  பிரதிக் கல்வி பணிப்பாளர்களான பி. பரம தயாளன் , எம்ஏஎம்.சியாத், விஞ்ஞான பாட வளவாளர் ரிஎல்.றயிஸ்டீன் ஆகியோர்  நேரில் சென்று  பாராட்டி கெளரவித்தனர்.


இத் தேசிய மட்ட பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் இம் மாணவி மாத்திரமே  வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.


பின்தங்கிய கிராமத்தில் வாழும் அவர், தாமாகவே இப் பிரத்தியேக பரீட்சைக்கு விண்ணப்பித்து சுயமாக கற்று தேடலில் ஈடுபட்டு இம் மகத்தான சாதனையை படைத்துள்ளார். 


பெறுபேறுகள் கிடைத்த பின்னரே குறித்த மாணவி இவ்விதம் சாதனை படைத்திருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.வியப்பாக இருந்தது.


இவரது சாதனையால் கிழக்கு மாகாணம், சம்மாந்துறை வலயம், மற்றும் மல்வத்தை பெருமையடைகிறது.


மேலும்,  மாணவி சிவரூபன் ஜினோதிகா ஏலவே தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளிலும் சாதனை படைத்து பதக்கங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe