சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற தெரிவுசெய்யப்பட்ட சுமார் 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது.
சம்மாந்துறை இருட்டு வட்டம் அமைப்பின் தலைவர் சட்டமுதுமானி எம்.ஏ.எம்.லாபீர் தலைமையில் சம்மாந்துறையில் பல்வேறு பகுதிகளில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
குறித்த அமைப்பானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சமூக சேவைகள் மற்றும் பல்வேறு உதவித்திட்டங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அமைப்பின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் " எங்கள் அமைப்பானது எவ்வித அரசியல் எண்ணங்களும் இல்லாமல் ஓர் சமூக சேவையாக காணப்படுகிறது, அமைப்பின் விசேட அம்சமாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் போது புகைப்படம் எடுக்கப்பட்ட மாட்டாது, அனைத்து உலர் உணவுப் பொருட்களும் அமைப்பு உறுப்பினர்களின் சொந்த நிதி " போன்ற பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சம்மாந்துறை இருட்டு வட்டம் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.