இம் முறை நடைபெறவுள்ள உள்ளுராச்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சிசார்பில் சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தில் போட்டியிட 3 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் காலித் அப்துல் ஹமீத், முஹம்மட் ஆசிக் மற்றும் முஹம்மட் ரிஸ்விகான் ஆகிய 3 வேட்பாளர்களையே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இம்முறை வீரமுனை வட்டாரத்தில் களமிறங்கியுள்ளது.
முன்னாள் பிரதேச சபைத் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் முன்னிலை நேற்று இம் மூவரும் தங்களது வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.