Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையின் திண்மக்கழிவகற்றும் பணிக்கு இரண்டு உழவு இயந்திரங்கள் அன்பளிப்பு.

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நிறுவனங்களின் சுமார் 09 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் LDSP செயற்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் சம்மாந்துறை பிரதேச சபைக்கு  கையளிக்கப்பட்டுள்ளன.


சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட்  அவர்களினால் இவ் உழவு இயந்திரங்களை திண்மக்கழிவகற்றும் பணிக்கு இன்று வியாழக்கிழமை சாரதிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 


சம்மாந்துறை பிரதேச சபை 132 சதுர கிலோ மீற்றர் பரப்பை கொண்ட 51 கிராமசேவர் பிரிவில் 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட சனத்தொகையினை கொண்ட  இப்பிரதேசத்தில் சுமார் 20 வருடங்களுக்கு மேலான உழவு இயந்திரங்களை பயன்படுத்தியே தற்போது திண்மக்கழிவகற்றல் சேவை முன்னெடுக்கப்படுகின்றன.


தற்போதைய காலகட்டத்தில் இந்த உழவு இயந்திரங்கள் பெரிதும் உதவியளிப்பதுடன் திண்மக்கழிவு முகாமைத்துவ சேவையில் எதிர்நோக்கப்பட்ட சிரமங்களில் ஓரளவு தீர்வாக அமையுமென சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் குறிப்பிட்டார்.


தகவல் மையம் 

சம்மாந்துறை பிரதேச சபை

0672030800






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe