தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கல்.
சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நடாத்தப்பட்டு வருகின்ற தனியார் கல்வி நிலையங்களுக்கு பின்வரும் காரணங்களை கருத்தில் கொண்டு தற்காலிகமாக விடுமுறையினை வழங்குமாறு பல தரப்பினர்களினாலும் பிரதேச சபைக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
1. தமிழ் சிங்கள புதுவருடம்.
2. தற்போது நடைபெற்று முடிந்த க.பொ.த (சா/த) பரீட்சை.
3. க.பொ.த (சா/த) பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தங்கள் உயர்தர வகுப்புக்கான கற்கை நெறிகளை தெரிவு செய்வதற்கான கால அவகாசம் வழங்குதல்.
எனவே மேற்படி விடயங்களினைக் கருத்திற்கொண்டு தனியார் கல்வி நிலையங்களில் எதிர்வரும் 2025.04.07 ம் திகதி தொடக்கம் 2025.04.27 ம் திகதி வரை விடுமுறை வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறும் அவ்வாறு செயற்படத் தவறும் பட்சத்தில் தங்களது கல்வி நிலையத்திற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.