Ads Area

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ தளபாடங்கள் கையளிப்பு!

 நூருல் ஹுதா உமர்.


சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் செய்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் அவ் வைத்தியசாலையின் உயர் சார்பு  (High Dependency Unit (HDU) பிரிவுக்குச் சென்று பார்வையிட்டார்.


இதன் போது குறித்த பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒரு சில மருத்துவ தளபாடங்களை தந்துதவுமாறு பிராந்திய பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்தனர். மிகவும் அவசரத் தேவையாக உள்ள விடயங்களை உடனடியாக நிவர்த்தி செய்து தருவதாக பணிப்பாளர் இதன்போது உறுதியளித்தார்.


அதற்கமைவாக பிராந்திய பணிப்பாளர் அவர்களின் துரித நடவடிக்கையின் பயனாக மருத்துவ தளபாடங்கள் குறித்த தினமே சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது. அதனை அந்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் பீ.பிரபாசங்கர் High Dependency Unit (HDU) பிரிவுக்கு கையளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe