நேற்றிரவு பாலமுனை கடற்கரையிலிருந்து படகு மூலம் மீன்பிடிக்கச் சென்ற காத்தான்குடி நூறானியா வீதியைச்சேர்ந்த பஷீர் நானா என்பவர் கரை திரும்பும் போது படகிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.
இரவு மீன்பிடித்துக்கொண்டு கரை வரும் போது பூனொச்சிமுனை பகுதியில் தூக்கம் ஏற்பட்டதால் படகின் விளிம்பில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை 3.30 மணியளவில் படகின் மீது கடலலை தாக்கியதால் படகிலிருந்து தூக்க கலக்கத்தில் தவறி விழுந்து இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
ஜனாஸா நதியா பீச் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிசார் விசாரணகளை மேற்கொண்டுள்ளனர்.