2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.
SLBFE இன் கூற்றுப் படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் மொத்தம் 100,413 பதிவுசெய்யப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றுள்ளனர்.
அவர்களில், சுய பதிவு மூலம் வெளியேறியவர்கள் 64,150 பேர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் பதிவுசெய்தவர்கள் 36,263 பேர். இந்தக் குழுவில் 39,496 பெண்கள் மற்றும் 60,917 ஆண்கள் அடங்குவர்.
குவைத்தில் வேலைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் செய்யப்பட்டன, இதில் 25,672 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 18,474 பதிவுசெய்யப்பட்ட நபர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைகளுக்காகவும், 14,162 பேர் கத்தாருக்கு மற்றும் 12,625 பேர் சவுதி அரேபியாவிற்கும் சென்றனர்.
இந்த ஆண்டு 340,000 பேரை வெளிநாடுகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கிறோம் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.