Ads Area

மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபராக அதிபர் சேவை முதலாம் தர அதிகாரி ஸம்ஸம் பொறுப்பேற்றார் !

 (நூருல் ஹுதா உமர்)


சம்மாந்துறை கல்வி வலய மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபராக முன்னாள் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியாகவும், பல்வேறு பாடசாலைகளின் அதிபராகவும் கடமையாற்றி அனுபவம் கொண்ட அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த வீ.எம். ஸம்ஸம் அண்மையில் (16) பொறுப்பேற்றார்.


இப்பாடசாலையின் அதிபராக 12 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்த மௌலவி வை.பி.ஏ. சுல்தான் புதிய அதிபரிடம் பாடசாலையின் பொறுப்புக்களை கையளித்தார்.


நாவிதன்வெளி கோட்டக்கல்வி அதிகாரியும், சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை பிரதி கல்வி பணிப்பாளருமான பீ. பரமதயாளன் அவர்களின் முன்னிலையில் தமது பொறுப்புக்களை கையேற்ற புதிய அதிபர் தாம் இந்த பாடசாலையை மேலும் கல்வி ரீதியாகவும், ஏனைய இணைப்பாடவிதான ரீதியாகவும் முன்னேற்ற முழுமையாக பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்தார்.


இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனை ஆசிரிய ஆலோசகர் ஏ.எச்.எம். சவாஹிர், சவளக்கடை வீரத்திடல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் திருமதி ஏ.எம்.முனாஸிர், நற்பிட்டிமுனை கமு/கமு/ லாபீர் வித்தியாலய அதிபர் சீ.எம். நஜீப், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர், அல்- கரீம் பௌண்டஷன் தலைவர் சீ.எம். ஹலீம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர், புதிய அதிபரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe