Ads Area

புனாணை ICST பல்கலைக்கழக உப வேந்தராக பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்.

 நூருல் ஹுதா உமர்.

 

புனாணை ICST பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் சிறியானி விக்ரமசிங்க கடந்த 14.06.2025ம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


முன்னாள் வேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதோடு, குறித்த பதவி வெற்றிடமானது. இதனைத்தொடர்ந்தே புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டார்.


இந்நிகழ்வில், ICST பல்கலைக்கழக நிறுவுனர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் உபவேந்தர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, பல்கலைக்கழகத்தின் தவிசாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், பொது முகாமையாளர் எஸ்.எம்.தாஹிர் மற்றும் மதத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe