சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பாகிஸ்தான் யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். புனித நகரமான மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்த போது நடந்த சாலை விபத்திலேயே நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பாகிஸ்தானிய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக சவுதி மற்றும் பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று (26/07/25) சனிக்கிழமை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த 7 பேரும் பாகிஸ்தானின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.
குடும்பத்தினரின் கூற்றுப்படி, இறந்தவர்கள் 11 நாட்களுக்கு முன்பு உம்ரா செய்ய சவுதி அரேபியாவுக்குச் சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் நல்லடக்கம் சவுதி அரேபியாவில் நடைபெறும்.