சம்மாந்துறை பிரதேச சபையின் 05ஆவது சபையின் கன்னி அமர்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கெளரவ தவிசாளரின் கன்னி உரையினை நிகழ்த்தியதுடன் அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து கெளரவ தவிசாளரினால் சகல உறுப்பினர்களுக்கும் கருத்தை தெரிவிக்கும் வகையிலான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
சபைக்காக தெரிவு செய்யப்படவேண்டிய அபிவிருத்தி நிதி நிர்வாக தொழிநுட்ப போன்ற பல்வேறு ஆலோசனை, பெறுகை போன்ற குழுக்கள் நியமிப்பதற்கான அங்கீகாரமும் பெற்றப்பட்டது.
ஹஜ் கடமைக்காக சென்ற பொழுது மதீனாவில் மரணித்த சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் அச்சி முஹம்மட் அவர்களுக்கு சபையில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ உப தவிசாளர் வீ.வினோகாந், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட், கெளரவ உறுப்பினர்கள், அல்- முனீர் பாடசாலையின் மாணவ தலைவர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#தகவல் மையம்
#சம்மாந்துறை பிரதேச சபை
0672030800